நாம் அதிகமாக சாப்பிடும் சமோசா, பிரியாணி, சிக்கன் டிக்கா மசாலா, ராஜ்மா சாவல் மற்றும் பல உணவுகள் இந்தியாவை பாரம்பரியமாக கொண்டது என பலரும் நினைப்பதுண்டு.
ஆனால், இறைச்சி வைத்து மட்டுமே தொடக்கத்தில் செய்யப்பட்ட சமோசா பெர்சியா நாட்டு உணவாகும்.
டெல்லி, அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் பிரசித்தி பெற்ற ஜிலேபி, மத்திய கிழக்கு நாடுகளில் உருவான இனிப்பு வகை ஆகும்.
ராணுவ வீரர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவாக மொகலாய மன்னர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது தான், தற்போது அனைவரின் விருப்ப உணவாக மாறிப்போன பிரியாணி.
ஸ்காட்லாந்தில் வாழ்ந்த பங்களாதேஷி சமையல் கலைஞர் எதேர்ச்சையாக சமைத்த உணவு தான் சிக்கன் டிக்கா மசாலா. வட இந்தியாவில் அத்தியாவசிய உணவாக விளங்கும் ராஜ்மா சாவல், மெக்ஸிகோ மற்றும் போர்த்துகீசிய நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களால் தான் அறிமுகமானதாக கூறப்படுகிறது.
இனிக்கும் சுவையால் அனைவரையும் கட்டி போடும் குலாப் ஜாமுன் பெர்சிய இனிப்பாகும். இந்தியர்கள் அனைவரும் விரும்பி குடிக்கும் தேநீர் வர்த்தகத்தில் கொடி கட்டி பறந்த நாடு சீனா. சீனாவில் இருந்து முன்னரே தேயிலை இறக்குமதி நடந்து வந்த நிலையில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவில் தேயிலை விவசாயம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.