Sunday, December 22, 2024

சூர்யாவுக்கு போட்டியாக மாறிய சமந்தா

https://www.instagram.com/reel/CbsMpUcIoik/?utm_source=ig_web_copy_link

சமந்தாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் மாடித் தோட்டம் அமைப்பதிலும்
சமையலைக் கற்றுக்கொள்வதிலும் ஆர்வமும் ஈடுபாடும் காட்டினார்
நடிகை சமந்தா. இதுதொடர்பான வீடியோக்களைத் தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

மணமுறிவுக்குப் பிறகு மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்பட்ட
சமந்தா ஜிம்முக்குச்சென்று உடலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்வதில் ஈடுபடத் தொடங்கினார். அதுதொடர்பான வீடியோவையும்
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

கணவரைப் பிரிந்த பிறகு சமந்தா என்ன செய்துவருகிறார் என்பதை
அவரது ரசிகர்கள் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினர். சமந்தாவும்
தனது தோழிகளோடு உள்ளூர், வெளிநாடு சுற்றுலா செல்வது போன்ற
செயல்களில் ஈடுபட்டார்.

தற்போது ஜிம்மில் அதிக நேரம் செலவிடத் தொடங்கியுள்ளார். சத்தான
உணவுகளை உண்பதோடு, உடலை வலுவாகவும் ஃபிட்டாகவும் வைத்துக்
கொள்வதிலும் ஆர்வம் காட்டிவருகிறார். இதற்காக காலையில் 5 மணிக்கே
ஜிம்முக்குச் செல்லும் சமந்தா வெயிட் லிஃப்டிங், இடுப்புப் பயிற்சி,
ஸ்குவார்ட்ஸ் போன்ற பயிற்சிகளில் தினமும் ஈடுபட்டுவருகிறார்.

எனக்கு சவால் என்றுகூறியபடி தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை
ஃபிட் ஆகவும், சிலிம் ஆகவும் வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டிவருகிறார்.
அவரது ரசிகர்களும் ஜிம்முக்குச்சென்று உடலை ஆரோக்கியமாகவும்
ஃபிட்டாகவும் வைத்துக்கொள்வார்களா?

Latest news