ரூ.50,400 வரை சம்பளம்., கிராம ஊராட்சி செயலர் பணி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த பணியிடங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் 31 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 8ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்திருக்க வேண்டும். கல்வி தகுதி சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.

ஊதியம்

தகுதியுள்ளவர்களுக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்புகள்

  • பொதுப்பிரிவு: 18 முதல் 32 வயது வரை
  • பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சீர்மரபினர்: 18 முதல் 34 வயது வரை
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள்: 18 முதல் 37 வயது வரை
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் யாரும் கூடுதல் தளர்வு
  • முன்னாள் ராணுவ வீரர்கள்: 18 முதல் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

  • பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கட்டணம்: ரூ.100
  • ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு: ரூ.50

தேர்வு செயல்முறை மற்றும் முக்கிய தேதி நாள்

  • விண்ணப்ப சரிபார்ப்பு: நவம்பர் 11 முதல் 24 வரை
  • நேர்காணல்: டிசம்பர் 4 முதல் 12 வரை
  • தேர்வானவர்கள் பட்டியல் வெளியீடு: டிசம்பர் 15 மற்றும் 16
  • பணி நியமன ஆணை வழங்கல்: டிசம்பர் 17

விண்ணப்பிக்கும் விதிகள்

விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க www.tnrd.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லலாம். விண்ணப்பங்களை 10 அக்டோபர் 2025 முதல் 9 நவம்பர் 2025 வரை சமர்ப்பிக்க வேண்டும்.

Related News

Latest News