இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) 976 இளநிலை அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பொறியியல் துறைகளில் பிஇ/பி.டெக் பட்டதாரிகள் இருந்து விண்ணப்பிக்கலாம்.
- காலியிடங்கள்: 976
- துறைவாரியாக:
- கட்டடக்கலை (Architecture) – 11
- சிவில் பொறியியல் (Civil) – 199
- மின்சார பொறியியல் (Electrical) – 208
- எலக்ட்ரானிக்ஸ் (Electronics) – 572
- தகவல் தொழில்நுட்பம் (Information Technology) – 31
- சம்பளம்: மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை
- வயது வரம்பு: 27.9.2025-இல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
- எஸ்சி, எஸ்டி – 5 ஆண்டுகள் தள்ளுபடி
- ஓபிசி – 3 ஆண்டுகள் தள்ளுபடி
- மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் தள்ளுபடி
- தகுதிகள்:
- பிஇ அல்லது பி.டெக் பட்டம் – சிவில், மின்சாரம், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் அல்லது அதற்கான இணையான பிற பொறியியல் துறைகள்
- கட்டடக்கலைத்துறையில் பி.ஆர்க்
- தகவல் தொழில்நுட்பத்துறையில் எம்சிஏ பட்டம்
- GATE 2023 அல்லது GATE 2024-25 தேர்வில் கேட் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- தேர்வு நடவடிக்கை:
- கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் சீராய்வு
- நேர்முகத் தேர்வு
- மருத்து தேர்வு
- தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் பணியமர்த்தப்படுவர்
- விண்ணப்ப கட்டணம்:
- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் ஏர் போர்ட் அத்தாரிட்டி அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள் கட்டணம் கட்ட வேண்டாம்
- மற்றோர் பிரிவினருக்கு ரூ.300 கட்டணம்
- கட்டணம் ஆன்லைனில் செலுத்துதல் கட்டாயம்
- விண்ணப்பிக்கும் முறை:
- www.aai.aero இணையதளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்
- விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 27.9.2025
- குறிப்பு: எழுத்துத் தேர்வு தேதி மற்றும் இடம் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
