இந்திய கிரிக்கெட் வாரியம் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோஜர் பின்னி பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவர் 70 வயது நிறைவடைந்தது.
பி.சி.சி.ஐ. விதிகளின்படி 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் நிர்வாகப்பதவிகளில் தொடர முடியாததால், ரோஜர் பின்னி தனது பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து புதிய தலைவரை தேர்தல் செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
இதில், இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புதிய பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு, சச்சினும் இதற்கு ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் சச்சின் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.