ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோநிகழ்ச்சியின் மேடையில் யாரும் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்தது. இந்த சம்பவம் அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு மோசமான அனுபவமாக இருந்தது.
திங்கட்கிழமை மாஸ்கோவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் AIdol என்ற பெயரில் அறிமுகமான இந்த ஹியூமனாய்டு ரோபோ, ‘ராக்கி’ திரைப்படத்தின் இசை பின்னணியில் மெதுவாக மேடையில் நடந்து வந்து, கூட்டத்தினரைப் பார்த்து கை அசைத்தபோது, திடீரென தலைகுப்புற விழுந்தது.
ரோபோ கீழே விழுந்ததும் அருகில் இருந்த ஊழியர்கள் உடனடியாக மேடைக்கு ஓடிச் சென்று, ரோபோவை தூக்கி சரிசெய்ய முயன்றனர்.
“இந்த தவறு ஒரு அனுபவமாக கருதப்படும். ரோபோவின் சமநிலையை சரிபார்த்து மேம்படுத்துவோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் இந்த ரோபோ விழுந்த சம்பவம் அதிக கவனம் பெற்றுள்ளது. இதை பலரும் கிண்டல் செய்து வந்தாலும் சிலர் ரோபோட்டிக்ஸ் துறை மிக கடுமையானதுதான் என்று கருத்துக்களும் பகிர்ந்து வருகின்றனர்.
