உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்-வை ரஷ்ய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது –
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வில் முடிந்தது.
இந்நிலையில் , கீவ் நகருக்கு அருகில் 64 கி.மீ. நீளத்திற்கு ரஷ்ய படை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை செயற்கைக்கோள் படங்கள் உறுதிபடுத்துகின்றன.