உக்ரைன், ரஷியா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு, அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் தனித்தனியாக விமானத்தில் வந்து சேர்ந்தனர். ரஷிய அதிபர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார்.
இதற்கிடையே உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், ரஷியா இனி இருக்காது என்றும், உக்ரைனுக்கு உறுதுணையாக இருப்போம் என அந்த போஸ்டரில் கூறப்பட்டிருந்தது.