Thursday, March 13, 2025

இந்திப் பாடலுக்கு ரஷ்யச் சிறுமியின் அசத்தல் நடனம்

இந்திப் பாடலுக்கு ரஷ்யச் சிறுமியின் அசத்தலான நடனம் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

சத்யமேவ ஜெயதே 2 என்ற படத்தின் பாடல்மூலம் மிகப் பிரபலமானவர்கள் நோரா ஃபதேஹி- குரு ரந்தாவா.

அனைவரின் மனதைக் கவர்ந்த அந்தப் பாடலைத் தொடர்ந்து, அண்மையில் டான்ஸ் மேரி ராணி என்னும் பாடலுக்கு அவர்கள் ஆடிய நடனம் தற்போது இந்திய சினிமா ரசிகர்களைத்தாண்டி உலகளவில் பலரைக் கவர்ந்துள்ளது.

அந்த வகையில், ரஷ்யாவைச் சேர்ந்த எசன்யா என்னும் 6 வயது சிறுமி நோரா- ஃபதேஹியைப்போல் நடனமாடி வியக்க வைத்துள்ளார். சிறுமியின் அற்புதமான நடனம் டான்ஸ் மேரி ராணி பாடலில் உள்ள நடன அசைவுகளை அப்படியே பிரதிபலிக்கிறது.

எல்லைகளைக் கடந்து இசை அனைவரையும் ஈர்க்கும் என்பதற்கு குட்டி நடனக் கலைஞர் எசன்யாவின் நடனம் ஒரு சிறந்த உதாரணம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் எசன்யாவின் நடனம் தற்போது டிரெண்டாகத் தொடங்கியுள்ளது.

Latest news