ரஷ்யா கையில் எடுத்த புது ‘ஆயுதம்’! இந்தியாவுக்கு ஜாக்பாட்! – அமெரிக்காவுக்கு செக்!

போர் பதற்றங்கள் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், எரிசக்தி சந்தையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு மாஸ்டர் பிளானை கையில் எடுத்திருக்கிறார். ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால், உலகமே எரிசக்தி தட்டுப்பாட்டில் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள ரஷ்யா களமிறங்கியிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மீது கடுமையான தடைகளை விதித்துள்ளன. ஆனால், இதையெல்லாம் தகர்த்து, அமெரிக்கா தடை விதித்த அந்தத் தளங்களில் இருந்தே திரவ எரிவாயுவை (LNG) எடுத்து, சர்வதேச விலையை விட 40 சதவீதத் தள்ளுபடியில் விற்க ரஷ்யா தயாராகிவிட்டது.

இந்தியா மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகள், தங்கள் மின் உற்பத்தி மற்றும் உரத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான எரிவாயு கிடைக்காமல் திணறி வரும் வேளையில், ரஷ்யாவின் இந்தத் தள்ளுபடி ஆஃபர் அவர்களுக்கு ஒரு பெரிய ஜாக்பாட் என்றே சொல்லலாம்.

சரி, தடைகளை மீறி ரஷ்யா இதை எப்படிச் செய்யப் போகிறது? இதுதான் இங்கே புதினின் மாஸ்டர் ஸ்டிரோக். ரஷ்யா நேரடியாக விற்காமல், சீனா மற்றும் ரஷ்யாவில் உள்ள மறைமுக நிறுவனங்கள் மூலமாகவும், ஓமன் அல்லது நைஜீரியா போன்ற நாடுகள் தான் இந்த எரிவாயுவை அனுப்புவது போலப் போலி ஆவணங்களை உருவாக்கியும், இந்த எரிவாயுவைத் தெற்கு ஆசிய நாடுகளுக்குக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு ரஷ்யா-சீன இடைத்தரகர்களின் நெட்வொர்க் கச்சிதமாக வேலை செய்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளால் ஐரோப்பிய சந்தையை இழக்கும் நிலையில் உள்ள ரஷ்யா, தெற்கு ஆசியாவைத் தனது புதிய நிரந்தர வாடிக்கையாளராக மாற்றத் துடிக்கிறது. ஆனால், இங்கேயும் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்தத் தள்ளுபடி எரிவாயுவை வாங்கினால், அமெரிக்கா தன் தரப்பு இரண்டாம் நிலை தடைகளை (Secondary Sanctions) விதிக்கும் என்று அச்சுறுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், இஸ்லாமாபாத்தில் நடக்கவிருக்கும் அமெரிக்கா – ஈரான் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்னதாகவே ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது, கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பதற்றம் குறைந்தால் இந்தச் சலுகை தேவையற்றதாக மாறலாம், ஆனால் பதற்றம் தொடர்ந்தால், ரஷ்யாவின் இந்தத் தள்ளுபடி ஆஃபர் தெற்கு ஆசிய நாடுகளுக்கு ஆபத்பாந்தவனாக மாறும். ரஷ்யாவின் இந்த நகர்வு டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகளுக்குக் கொடுக்கும் செக் என்றுதான் உலக வல்லுநர்கள் பார்க்கிறார்கள்.

Related News

Latest News