புற்றுநோயைக் குணப்படுத்த பக்க விளைவுகள் இல்லாத தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி 100% செயல்திறனைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் கட்டிகளை முற்றிலுமாக அழிக்கும் இந்தத் தடுப்பூசிக்கு ‘என்ட்ரோமிக்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதலுக்காக தற்போது மருத்துவக் குழு காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் புற்றுநோய் தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு வந்து விடும் என கூறப்படுகிறது.
புற்றுநோய் தடுப்பூசி, சோதனை முயற்சியில் வெற்றி கொண்டதாக ரஷ்யாவின் சுகாதாரத் துறை கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநரான ஆண்ட்ரே கப்ரின் கடந்த ஆண்டே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் புற்றுநோய் கட்டி வளர்வது தடுக்கப்பட்டதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர்.
வெகு விரைவில் புற்றுநோய் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புற்றுநோய் தடுப்பூசியின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.