டெல்லியில் உள்ள ஜாண்டேவாலன் பகுதியில், 150 கோடி ரூபாய் செலவில் RSS புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கேஷவ் குஞ் என்ற பெயர் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடம், கோபுர வடிவிலான மூன்று பகுதிகளில், தலா 12 மாடிகளை கொண்டுள்ளது. ஆயிரத்து 300 பேர் அமரக்கூடிய வகையில், இங்குள்ள அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில், 150 கோடி ரூபாய் மதீப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.