Wednesday, April 2, 2025

“காலில் போடும் செருப்புக்கு சமம்” – தவெக வை கடுமையாக சாடிய ஆர்.எஸ் பாரதி

‘தமிழக வெற்றிக் கழகம்’ வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தவெக வை கடுமையாக சாடியுள்ளார். அவர் பேசியதாவது : திமுகவை கைப்பற்றி அதை செய்வேன், இதைச் செய்வேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டார்கள். 75 ஆண்டு காலத்தில் எல்லா தலைவர்களையும் பார்த்து, சந்தித்து உயர்ந்த கட்சி.

17 மாசத்துக்கு முன்னாடி பிறந்த ஒரு குழந்தை (தவெக) சவால் விடுகிறது என்றால் காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

Latest news