சென்னை அம்பத்தூர் திருவல்லீஸ்வரர் நகரை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் வீட்டில் 2 மாதத்துக்கு சராசரியாக 450 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 2 மாதத்துக்கு ஒருமுறை ரூ.1,500 முதல் ரூ.2.000 வரை மின்கட்டணம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் இந்நிலையில், நந்தகுமார் வீட்டில் ஜூலை மாத கணக்கீட்டின் படி 8,370 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக, ரூ.91,993 மின்கட்டணம் வந்துள்ளது. இதை பார்த்த நந்தகுமார் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.