நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, குப்பைத் தொட்டியில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை எடுத்து காவல்துறையில் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
குமாரபாளையம் அடுத்த வளையக்காரனூரை சேர்ந்த தம்பதி கார்த்திகேயன் – புனிதா. தம்பதி கட்டட வேலை செய்து வரும் நிலையில், இவர்களின் மகன் ஜினார்த், சேலம் கோவை புறவழிச்சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் 50 ஆயிரம் ரூபாய் இருப்பதை கண்ட நிலையில், பணத்தை எடுத்து காவல் நிலைய உதவியாளர் மாதேஸ்வரனிடம் ஒப்படைத்தார். பணத்தை பெற்ற இன்ஸ்பெக்டர், சிறுவனுக்கு சால்வை அணிவித்த நிலையில், புத்தகத்தை பரிசாக வழங்கி பாராட்டினார்.
