BHIM செயலி இந்த மாத இறுதியில் தனது 10வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேலும் மேம்படுத்த புதிய பயனர்களுக்கு BHIM செயலி கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது.
அந்த வகையில் புதிய பயனர்கள், 20 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தங்களது முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ரூ. 20 கேஷ்பேக் பெறுவார்கள். BHIM செயலியை உருவாக்கிய NBSL, புதிய பயனர்கள் தங்களது அன்றாட ஷாப்பிங்கிற்கு BHIM செயலியைப் பயன்படுத்தினால் தகுதியான பரிவர்த்தனைகளுக்கு மாதத்திற்கு 300 ரூபாய் வரை கேஷ்பேக் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
மளிகைப் பொருட்கள், பஸ் டிக்கெட் அல்லது மெட்ரோ ரயில் டிக்கெட்டுகள், ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள், மின்சாரம் மற்றும் பெட்ரோல் செலவுகள் போன்றவற்றுக்கான பரிவர்த்தனைகளுக்கு இந்த சலுகைகளை மக்கள் பெறலாம். இது நம் நாட்டில் யூபிஐ பயன்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
