Friday, April 18, 2025

கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம்

சென்னை மாநகராட்சி பகுதிகளில், விதிகளை மீறி கட்டுமான மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டினால் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில், பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கட்டட கழிவுகளை ஒப்படைப்பதில், ஒரு டன் வரை இலவசமாக கொடுக்கலாம் என்றும், அதிக அளவு கழிவுகள் இருந்தால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில், விதிகளை மீறி கட்டுமான மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டினால் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பொது இடங்களில் விதிகளை மீறி கழிவுகளை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், நீர்நிலைகளில் அதிக அளவில் கழிவுகளை கொட்டினால், டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news