ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

  • காலியான 3 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை.
  • ரேஷன் அட்டைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை.
  • முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் பென்சன் கிடைக்க நடவடிக்கை.
  • 6 மண்டலங்களிலும் தனிச் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.
  • அரசு பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கற்றல். இதற்காக ஆசிரியர்களுக்கு ஏஐ பயிற்சி.
  • அனைத்து ரேஷன் கடைகளும் புதுப்பிக்கப்பட்ட தரமான அரிசி வழங்கப்படும்.
  • 2030க்குள் ரேபிஸ் மரணங்கள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும்.
  • விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக வாரியம்.
  • பாசனக் கால்வாய்கள் மீட்டெடுக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும்.
  • தமிழகத்தை உலகளாவிய ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை.

உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளது.

Related News

Latest News