நேபாளம் செல்லும் இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுவரை தடை செய்யப்பட்டிருந்த ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை, இனிமேல் நேபாளத்திற்கு கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செய்தியால் நேபாளத்தின் சுற்றுலா மற்றும் வர்த்தக துறைகளுக்கும் மிகப்பெரிய பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளாக நீடித்திருந்த ஒரு முக்கியமான தடைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது
