இந்தியச் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமும் தகுதியும் கொண்ட பொறியியல் பட்டதாரிகள் 7 ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரங்கள்
Senior AI Engineer
- காலியிடங்கள்: 2
- சம்பளம்: மாதம் ₹2,50,000
- தகுதி: அறிவியல், தொழில்நுட்பம், வியாபார நிர்வாகம், கணித/புள்ளியியல், பொருளியல் போன்ற துறைகளில் பின்வரும் பணி அனுபவத்துடன் இளங்கலை அல்லது முதுநிலை பட்டம்
- வேலை அனுபவம்: 2-5 வருடங்கள்
AI Engineer
- காலியிடங்கள்: 3
- சம்பளம்: மாதம் ₹2,00,000
- தகுதி மற்றும் பணி அனுபவம் Senior AI Engineer போலவே
Associate AI Engineer
- காலியிடங்கள்: 5
- சம்பளம்: மாதம் ₹1,50,000
- தகுதி: அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வியாபார நிர்வாகம் ஆகிய துறைகளில் முதுநிலை பட்டம்
Full Stack Engineer
- காலியிடங்கள்: 2
- சம்பளம்: மாதம் ₹1,75,000
- தகுதி: அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வியாபார நிர்வாகம் ஆகிய துறைகளில் இளங்கலை பட்டம்
Associate AI Product Designer
- காலியிடங்கள்: 3
- சம்பளம்: மாதம் ₹1,75,000
- தகுதி: வடிவமைப்பு, மனிதக் கணினி தொடர்பு (HCI), விசுவல் கம்யூனிகேஷன், கலை, சேவை வடிவமைப்பு, சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் நிர்வாகம், வியாபாரம் மற்றும் தயாரிப்பு தொடர்பான துறைகளில் முதுநிலை பட்டம்
Associate AI Product Engineer
- காலியிடங்கள்: 3
- சம்பளம்: மாதம் ₹1,30,000
- தகுதி: மேற்கூறியதையே போன்று
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
7 அக்டோபர் 2025