Monday, December 1, 2025

10,000 ரூபாய் அபராதம்.. பான் கார்டு விஷயத்தில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க

பான் கார்டு இந்தியர்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இது வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க மத்திய அரசு புதிய பான் 2.0 முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால் வருமான வரித் துறைக்கு உடனடியாகத் தெரிந்துவிடும். சட்டப்படி, ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது கடுமையான குற்றமாகும்.

பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறுதலாகக் கூட உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால் நீங்கள் ரூ. 10,000 வரை அபராதம் செலுத்த நேரிடும். எனவே, உங்கள் பெயரில் டூப்ளிகேட் பான் கார்டு உள்ளதா என்பதை சரிபார்ப்பது அவசியம்.

உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், முதலில் வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் இணையதளத்திற்குச் சென்று ‘PAN Status Check’ என்பதை கிளிக் செய்து, உங்கள் பான் எண்ணை உள்ளிட்டு, உங்கள் பெயரில் வேறு ஏதேனும் பான் கார்டுகள் உள்ளதா எனச் சரிபார்க்கலாம்.

உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், அவற்றை ஒப்படைக்க NSDL அல்லது UTIITSL இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு ‘PAN Change / Correction / Surrender Form (49A)’ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News