பிகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சரின் மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 75 லட்சம் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு, முதற்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா எனும் மகளிர் சுய உதவிக்குழு திட்டம் பிரதமர் மோடியால் இன்று துவக்கப்பட்ட உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.7,500 கோடி கணக்கிடப்பட்டுள்ளது.
பெண்களை சுயசார்பு ஆக்குவதையும், சுயதொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் மூலம் அதிகாரமளிப்பதை ஊக்குவிப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. முதற்கட்டமாக, ரூ.10,000 ஆரம்ப மானியமாக வழங்கப்படும், அடுத்தடுத்த கட்டங்களில் ரூ.2 லட்சம் வரை கூடுதல் நிதி உதவி கிடைக்கும்.மேலும், வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாயை திருப்பித் தரத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் சமூகத்தால் இயக்கப்படும், மேலும் சுயஉதவிக்குழுக்களுடன் இணைக்கப்பட்ட வள நபர்கள் அவர்களின் முயற்சியை ஆதரிக்க பயிற்சி அளிப்பார்கள். அவர்களின் விளைபொருட்களின் விற்பனையை ஆதரிக்க, மாநிலத்தில் கிராமப்புற சந்தை மேலும் மேம்படுத்தப்படும் என்று திட்ட அதிகாரிகள் தெரிவித்தார்.