Saturday, December 27, 2025

‘நாட்டு நாட்டு’ பாட்டுக்கு வேற லெவல் குத்து போட்ட கொரியர்கள்! வைரலாகும் வீடியோ

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் உயரிய Golden Globe விருதோடு சேர்த்து பல விருதுகளை வென்று சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

ஹாலிவுட் நடிகர்கள் முதல் டிக் டாக் பிரபலங்கள் வரை இப்பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கான கொரியா தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இணைந்து ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியுள்ளனர்.

கொரிய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவை, Quote செய்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான குழு முயற்சி என பாராட்டி ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News