இந்திய டென்னிஸ் இரட்டையர் பிரிவின் தலைசிறந்த வீரர் ரோகன் போபண்ணா, இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இவர் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். 43 வயதில் ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம்ப் பட்டத்தை வென்றார், மேலும் 2017ஆம் ஆண்டில் பிரென்சு ஓப்பனில் கலப்பு இரட்டையர் சாம்பியனாகவும் திகழ்ந்துள்ளார்.
இதுதொடர்பாக போபண்ணா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், குட்பை, ஆனால் இது முடிவல்ல என பதிவிட்டுள்ளார்.
