EPFO மோசடி புகாரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கர்நாடகா காவல் துறையினர் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
செஞ்சுரிஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தை நிர்வகித்த உத்தப்பா, ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ₹ 23 லட்சத்தை பிடித்தம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது . உத்தப்பாவை பிடித்து அவரிடம் நேரில் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.