தேனி மாவட்டம் ஈஸ்வர் நகரில் போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு சட்டவிரோதமாக விற்பனை மற்றும் கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் அந்த போலீஸ் ஸ்டேஷனில் மர்ம நபர்கள் மாடி வழியாக உள்ளே புகுந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும் மர்ம நபர்கள் தப்பித்து ஓடியுள்ளார். அப்போது ஒருவரை போலீசார் பிடிக்க முயன்ற போது மர்ம நபர் அவரை தாக்கியுள்ளான். பின்னால் வந்த மற்ற போலீஸார், சாதுர்யமாக செயல்பட்டு, அந்த கொள்ளையர்களை பிடித்தனர்.
இருவரையும் கைது செய்து அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம், பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு விசாரணை நடத்தி வருகின்றனர்.