ஆத்தூரில் நகை கடையில் கொள்ளை அடித்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் Youtube-ஐ பார்த்து திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கடை வீதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவரது நகைக்கடைக்கு நேற்று முன்தினம் இரவு வந்த 2 பேர், ஆசிட் பாட்டிலை அங்கிருந்தவர்கள் மீது ஊற்றி, 80 சவரன் தங்க நகையை கொள்ளையடிக்க முயன்றனர்.
அதில் ஒருவரை கடை உரிமையாளர் மடக்கிப்பிடித்த நிலையில், மற்றொரு நபரை அப்பகுதிமக்கள் விரட்டி பிடித்தனர். இதில் ஒருவர் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
Youtube-ஐ பார்த்து மூர்த்தியும், சாமிதுரையும் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு, ஆட்கள் குறைவாக உள்ள நகைகளை நோட்டமிட்டதும் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தனிப்படை போலீசார் சாமிதுரை வீட்டில், வேறு ஏதுவும் துப்பாக்கிகள் உள்ளதா என சோதனை செய்தனர்.