Thursday, May 8, 2025

இந்திய அளவில் ‘ரெட்ரோ’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் ‘ரெட்ரோ’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘ரெட்ரோ’ திரைப்படம் இந்திய அளவில் ரூ.19.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வார விடுமுறை வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news