சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியானிங் மாகாணத்தின் லியோயாங் நகரில் உணவகம் ஒன்று உள்ளது. 3 மாடி கொண்ட இந்த கட்டடத்தில் இன்று (ஏப்., 29) மதியம் தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்து காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. கேஸ் கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.