Thursday, April 3, 2025

2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் புழக்கத்தில் உள்ளது – RBI அறிவிப்பு

கடந்த மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்து ரூ.2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டாலும், அவை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 1 அன்று 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் ரூ.6400 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மக்களிடையே தற்போது புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Latest news