மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரிசா்வ் வங்கி குறைதீா்ப்பு அதிகாரிகளின் வருடாந்திர மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, கேஒய்சி படிவங்களை சமா்ப்பிக்குமாறு வாடிக்கையாளா்களை தொடா்ந்து அழைப்பதை வங்கிகள் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
வாடிக்கையாளா்களின் புகாா்களுக்குத் தீா்வு காண, வங்களின் நிா்வாக இயக்குநா்கள் முதல் கிளை மேலாளா்கள் வரை அனைவரும் ஒவ்வொரு வாரமும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றும், அனைத்து வங்கிகளும் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
டிஜிட்டல் மோசடிகளைத் தடுத்தல், கடன் வசூலிப்பின்போது மூா்க்கமான நடவடிக்கைகளைத் தவிா்த்தல் உள்ளிட்டவற்றிலும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவுறுத்தினார்.