Wednesday, December 17, 2025

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே.. மீண்டும் திரையரங்குகளில் “ஆட்டோகிராப்”…

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே பாட்ஷா, பாபா, வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், கேப்டன் பிரபாகரன், கில்லி, சச்சின், குஷி, வாரணம் ஆயிரம், யாரடி நீ மோகினி என பல திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

இந்த வரிசையில், அட்டகாசம் திரைப்படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த சூழலில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் வருகிற நவம்பர் 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார்.மேலும், இப்படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News