Saturday, May 17, 2025

‘ஒழுங்கு மரியாதையா இருந்துக்க’ ! ‘அணுஆயுதம்’ தொடர்பாக ஈரானை சீண்டிய டிரம்ப்!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, மீண்டும் ஒருமுறை முக்கியமான வளர்ச்சி நடந்துள்ளது. வளைகுடா நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அபுதாபியில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு ஒரு புதிய ஒப்பந்த திட்டத்தை அளித்துள்ளதாக தெரிவித்தார். அந்த ஒப்பந்தத்தை ஈரான் விரைவில் ஏற்க வேண்டும், இல்லையெனில் நிலைமை மிக மோசமாகி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக்கூடாது என்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, ஈரான் தங்கள் பொருட்கள், குறிப்பாக கச்சா எண்ணெயை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். மேற்கு நாடுகள் எந்த பொருளாதார தடையும் விதிக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்தன.

ஆனால் 2018ல் டிரம்ப் அரசு, இந்த ஒப்பந்தத்தை “ஏமாற்று ஒப்பந்தம்” என சுட்டிக்காட்டி, அதிலிருந்து வெளியேறியது. அதைவிட மோசமாக, ஈரானிடமிருந்து பொருட்களை வாங்கும் நாடுகளுக்கும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என தெரிவித்தது. இதனால் இந்தியா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தியது.

இதற்கு பதிலடியாக, ஈரான் யுரேனியம் செறிவூட்டலை 60% வரை உயர்த்தியது. நினைவிருக்கட்டும், 13% அளவுக்கு செறிவூட்டல் தான் நியாயமானது. ஆனால் 60% என்றால், 90% செறிவூட்டலை எட்டுவது மிக விரைவாக முடியும். 90% என்றால், அது நேரடியாக அணு ஆயுத தயாரிப்புக்கே வழிவகுக்கும்.

இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, அமெரிக்கா மீண்டும் புதிய ஒப்பந்தத்தை உருவாக்கி, ஈரானிடம் சமர்ப்பித்திருக்கிறது. தற்போது, ஈரான் ஏற்கும் முடிவே முக்கியம். ஏற்குமானால் அமைதி, இல்லையெனில் உலகத்துக்கு ஒரு பெரிய தடுமாற்றம்.

Latest news