தமிழகம் உள்பட தென்மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இன்று (மே 28ம் தேதி) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கான “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு மே 28, 29 ஆகிய தேதிகளில் மீண்டும் அதி கன மழைக்கான “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.