இந்தியாவின் தனியார் தகவல் தொலைதொடர்பு நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல், வி.ஐ, வரும் டிசம்பர் மாதம் முதல் தங்களுடைய செல்போன் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம் என கூறப்படுகிறது. 5G சேவைகளுக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கட்டண உயர்வு குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி இருந்து வரும் நிலையில் இந்த செய்தி மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
