சளி, காய்ச்சல், இருமல், மூச்சு வாங்குதல் போன்ற பிரதான அறிகுறிகளுடன் கோவிட் பெருந்தொற்று பாதிக்கும் போது வாசனை நுகர்வு திறன் குறைந்து போதலும் நிகழ்கிறது.
பலருக்கும் தொற்று சரியாகி ஓரிரு வாரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும் நுகரும் திறன், சிலருக்கு வெகுநாட்களுக்கு காணாமலே போய்விடுகிறது.
சாதாரண நேரங்களில் நாம் பெரிதாக கண்டுகொள்ளாத நுகரும் திறன் பாதிக்கப்படும்போது அன்றாட வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.
ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, சமர்ப்பித்த Duke Health Report என்ற அறிக்கையில், உடலில் நடக்கும் நோய் எதிர்ப்பு போராட்டத்தில் Olfactory நரம்புகள் பாதிக்கப்படுவதாகவும் அதனாலேயே வாசனை நுகரும் திறன் வெகுவாக குறைவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், திசுக்களில் ஏற்படும் வீக்கம் காரணமாகவே, நுகரும் திறன் குறைவதாகவும், நாளடைவில் உடலில் இருக்கும் நியூரான்களே இந்த சிக்கலை சரி செய்துவிடக் கூடிய ஆற்றல் படைத்தவையாக உள்ளது என கூறும் விஞ்ஞானிகள், கோவிட் பெருந்தொற்றின் போது ஏற்படும் நுகரும் திறன் இழப்பு பற்றி மேம்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என கருத்து தெரிவிக்கின்றனர்.