இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 7ம் தேதி அதிகாலை முதல் 10ம் தேதி மாலை வரை, மொத்தம் 87 மணி நேரம் கடுமையான சண்டை நடந்தது. இதில் நம் நாடு பாகிஸ்தானை தகர்த்தெறிந்தது. பயங்கரவாத முகாம்கள், விமான தளங்கள், ரேடார் மையங்கள் ஆகியவை நம் தாக்குதலில் அழிந்தன.
இந்தத் தாக்குதலுக்கு பின்னணி – ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தான். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் மிகத் துல்லியமான தாக்குதலை நடத்தியது.
7ம் தேதி நள்ளிரவில், வெறும் 25 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் ஏவுகணைகளால் நாசமாயின. இதனால் இருநாடுகளும் நேரடி மோதலுக்குச் சென்றன. பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் விமானங்களை அனுப்பி தாக்க முயன்றது.
ஆனால் நம் நாட்டின் S-400, ஆகாஷ் போன்ற வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் அதனை முற்றிலும் தடுத்து நிறுத்தின. இதனால் நம் நாட்டுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை.
இந்த மோதலில் பாகிஸ்தான் ரூ.29,000 கோடிக்கு சேதம் அடைந்துள்ளது. இந்தியா சுட்டு வீழ்த்திய F-16 போர் விமானங்களின் மதிப்பு மட்டும் 350 மில்லியன் டாலர். மேலும் 35 மில்லியன் மதிப்புள்ள Saab 340 AEW&C, இரண்டு Shaheen ஏவுகணைகள், ஒரு IL-78 refueling விமானம், 6 மில்லியன் மதிப்புள்ள பைராக்டர் ட்ரோன்கள் ஆகியன அழிக்கப்பட்டன. சார்கோதா விமான தளத்திலும் 100 மில்லியன் டாலருக்கு சேதம் ஏற்பட்டது.
இந்த தாக்குதலுக்காக இந்தியா 15 பிரமோஸ் ஏவுகணைகள் பயன்படுத்தியது. ஒவ்வொன்றும் ரூ.34 கோடி என்றால், ரூ.510 கோடி செலவாகி இருக்கிறது. இதனுடன் மற்ற செலவுகளும் சேரும்.
பாகிஸ்தான் நம் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறினாலும், எந்த ஆதாரமும் இல்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் “சமூக வலைதளங்களில் தேடுங்கள்” என்ற பதிலே அவர்களின் பொய்யை உறுதி செய்கிறது.
10ம் தேதி மாலையில் பாகிஸ்தான் இந்திய ராணுவத்தை தொடர்புகொண்டு சண்டையை நிறுத்த வேண்டுமென கெஞ்சியது. இந்தியா சம்மதித்ததால் 87 மணி நேர மோதல் முடிவுக்கு வந்தது.
இந்தியா தனது துல்லிய தாக்குதலாலும், நவீன ஆயுதங்களாலும், பாகிஸ்தானை திணற வைத்தது. இது நம் நாட்டின் ராணுவ பலத்தையும், முன் ஆயத்தத்தையும் உலகுக்கு காட்டிய நிகழ்வாகும்.