இன்னும் உங்ககிட்ட 2000 ரூபாய் நோட்டு உள்ளதா? அப்படியானால், இந்தச் செய்தி நிச்சயமாக உங்களுக்குத்தான். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இதுவரை அந்த 2,000 ரூபாய் நோட்டுகளை சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் சிலரிடம் இன்னும் இந்த நோட்டுகள் இருக்கின்றன.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின் படி, நாட்டில் பரவியுள்ள ரூ.2,000 நோட்டுகள் 98.31% வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், சுமார் ரூ.6,017 கோடி மதிப்பில் 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் இன்னும் உள்ளன.
உங்கள் வீட்டில் ரூ.2,000 நோட்டுகள் இருந்தால் அதை மாற்ற என்ன செய்ய வேண்டும்? எங்கே மாற்றலாம்? என்ற கேள்விகளுக்கு இங்கே முழு விளக்கம் தருகிறோம்.
முதலில் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றவோ அல்லது கணக்கில் டெபாசிட் செய்யவோ முடியாது. அதனால், உங்கள் அருகேயுள்ள வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
உங்கள் பணத்தை மாற்ற நாட்டின் 19 ரிசர்வ் வங்கி பிராந்திய அலுவலகங்களில் (பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் சில முக்கிய நகரங்கள்) நேரடியாக சென்று உங்கள் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கொண்டு நோட்டுகளை மாற்றலாம். அங்கு உங்கள் பணம் நேரடியாக உங்கள் கணக்கில் தற்போலே டெபாசிட் செய்யப்படும்.
இந்த ரிசர்வ் வங்கி அலுவலகங்கள், உங்கள் நகரத்தில் இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். காப்பீட்டுடன் (காப்பீடு செய்யப்பட்ட அஞ்சல்) இந்த ரூபாய் நோட்டுகளை உங்கள் அருகிலுள்ள தபால் அலுவலகம் மூலமாகவும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பலாம். நீங்கள் சரியான படிவத்தை நிரப்பி உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கினால், ரிசர்வ் வங்கி உங்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யும்.