இந்தியாவின் வங்கிகளில் கடன் பெறும் போது கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியம். பொதுவாக, கிரெடிட் ஸ்கோர் 700 மேல் இருக்கவேண்டும் என்ற விதி இருக்கும். இந்த கிரெடிட் ஸ்கோர் சம்பந்தப்பட்ட சில விதிமுறைகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் பெறுவதிலும், அதை திருப்பிச் செலுத்துவதிலும் மிகவும் முக்கியமானவை.
இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதுவரை உங்கள் கிரெடிட் ஸ்கோர் மாதம் ஒருமுறை மட்டும் புதுப்பிக்கப்படுவதை 7 நாட்களுக்கு ஒருமுறை, வாரந்தோறும் புதுப்பிக்கும் முறைக்கு மாற்றியது. இதனால், கிரெடிட் கார்ட் பயன்படுத்துவோர் மற்றும் கடன் வாங்குவோர் மிக விரைவாக தங்கள் பயனுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
புதிய விதிமுறைகளின் படி, வாரந்திரம் 7, 14, 21, 28 மற்றும் மாதத்தின் கடைசி நாள்களில் தகவல்கள் அனுப்பப்படும். இதனால் நீங்கள் EMI, கிரெடிட் கார்டு பில் கட்டியதும் அல்லது புதிய கடன் எடுத்ததும் உடனுக்குடன் உங்கள் கிரெடிட் அறிக்கையில் பதிவு ஆகும்.
மேலும், மாறிய தகவல்களை மட்டுமே அனுப்புவதால் இந்த செயல்முறை வேகமாகவும் எளிதாகவும் இருக்கும். இதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோர் விரைவில் மேம்படும், கடன் ஒப்புதலும் சீக்கிரமாக நடைபெறும். வங்கிகளுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும். அவர்கள் சரியான மற்றும் சமீபத்திய தகவல்களை உடனுக்குடன் பெறும் போது கடன் திருப்பிச் செலுத்தப்படாத அபாயம் குறையும். மோசடிகளை கண்டுபிடிப்பதும், கடன் வழங்கும் முறையை வேகமாக செய்யவதும் சாத்தியம்.
