இந்தியாவில் இயங்கும் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் வங்கிகளுக்கு அபராதம் விதிப்பது, வங்கி உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அந்த வகையில் முக்கிய ஒழுங்குமுறை உத்தரவுகளை பல முறை பின்பற்றாததற்காக, பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.1.72 கோடி அபராதம் விதித்துள்ளது.
வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949-இன் பிரிவுகள் 46 (4) (i), 51(1) மற்றும் 46 (4) (i) ஆகியவற்றின் கீழ் ரிசர்ச் வங்கி நடவடிக்கையை எடுத்துள்ளது.