தமிழகத்தில் ஏஏஒய் (AAY) மற்றும் பிஎச்ச் (PHH) எனப்படும் குடும்ப அட்டைகள் கொண்ட பயனாளிகள் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை (fingerprint) e-KYC முறையில் பதிவு செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
முதலில் இதற்கான கடைசி தேதி 2025 மார்ச் 31 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேதிக்குள் பதிவு செய்யாத காரணத்தால், பல லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. மேலும், சிலரது பெயர்கள் மட்டுமே ரேஷன் அட்டையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த e-KYC பதிவுக்கான கால அவகாசத்தை 2025 ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இது அனைவருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு.
ஜூன் 30ஆம் தேதிக்குள் உங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண் மற்றும் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் ஜூலை 1ஆம் தேதி முதல் உங்கள் பெயர்கள் ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்படும். அதற்குப் பிறகு, அந்த உறுப்பினருக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பிற நலத்திட்டங்கள் வழங்கப்படாது.
இந்த பதிவு எங்கே செய்யலாம் என்றால் – உங்கள் அருகிலுள்ள நியாய விலைக்கடைகளில் நேரில் சென்று செய்ய வேண்டும். அதேபோல், சிலரது பெயர்கள் நீக்கப்பட்டிருப்பின், மீண்டும் சேர்க்கும் வசதியும் அரசு வழங்கியுள்ளது.
அதற்காக தமிழகமுழுவதும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை “மக்கள் குறைதீர் முகாம்” நடத்தப்படுகிறது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை உங்கள் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அல்லது சென்னை நகருக்குள் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறும்.
இந்த முகாமில்,
– பெயர் சேர்த்தல்
– பெயர் நீக்கம்
– முகவரி மாற்றம்
– கைபேசி எண் பதிவுசெய்தல்
– மற்றும் e-KYC பதிவு போன்ற அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.
அதனால் உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தாலும் கவலை வேண்டாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஜூன் 30க்குள் e-KYC பதிவு செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் ரேஷன் பெறுவதில் பெரிய தடைகள் ஏற்படும்.