கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார். ரத்தன் டாடா, தனது வீடு மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு என ரூ.3 கோடிக்கு மேலான சொத்துக்களை ஒதுக்கி வைத்துள்ளார். 7 வருடம் மற்றும் அதற்கு மேலாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்க உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, பகுதிநேர உதவியாளர்கள் மற்றும் கார் சுத்தம் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் டாடா உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
தனது வீட்டில் நீண்டகாலமாக சமையல் செய்த ராஜன் ஷாவுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்க உயிலில் குறிப்பிட்டுள்ளார். அதில் ரூ.51 லட்சம் கடன் தள்ளுபடியும் அடங்கும்.
அவரது வீட்டில் சமையல் செய்த மற்றொரு சமையல்காரர் சுப்பையா கோனாருக்கு ரூ.36 லட்சம் கடன் தள்ளுபடி உட்பட ரூ.66 லட்சம் வழங்க கூறியுள்ளார். அதே நேரத்தில் அவரது செயலாளர் டெல்னாஸ் கில்டருக்கு மீதமுள்ள ரூ.10 லட்சத்தை வழங்க குறிப்பிட்டுள்ளார்.