இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும், விரட்டியடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். .
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது சிறைபிடிக்கப்பட்டுள்ளதை கண்டித்து அவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.