பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டு, வன்னியர் சங்கத்தின் கொடியை மாற்றியுள்ளார்.
வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வன்னியர் சங்க கொடியை காரில் பொருத்தியுள்ளார்.
