பாட்டாளி மக்கள் கட்சியின் இருந்து அன்புமணியை நீக்க ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
பாமகவில் தந்தை மற்றும் மகனுக்கு இடையே நடைபெறும் மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. தொடர்ந்து ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து, அன்புமணி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினார்.
எனது பேரை பயன்படுத்தக் கூடாது, ஓட்டு கேட்கும் கருவியை அன்புமணி வைத்தார், அன்புமணி வாயை திறந்தாலே பொய் கூறுவார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில் இன்று தைலாபுரம் தோட்டத்தில் நண்பகல் 12 மணிக்கு ராமதாஸ் தலைமையிலான 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு (ஜி.கே. மணி, அருள்மொழி, முரளிசங்கர் உள்ளிட்டோர் உறுப்பினர்கள்), கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது, தற்காலிக நீக்கம் செய்வது என்பன உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.