Friday, July 4, 2025

“நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம்” – ராமதாஸ் பேட்டி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அன்புமணியை செயல் தலைவர் என்று குறிப்பிட்டு பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர் : சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. அன்புமணியுடனான பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது.

நான் தைலாபுரத்திலேயே இருக்க வேண்டும் என பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறினர். நான் தொடங்கிய 34 அமைப்புகளை சேர்ந்த நான் நியமித்தவர்களே எனக்கு பஞ்சாயத்து செய்ய வந்தனர்.

என்னை நடைபிணமாக்க முயற்சி செய்கிறார்கள். என் கை விரலை வைத்தே என்னை குத்துகிறார்கள். குலசாமி என கூறி நெஞ்சில் குத்துகிறார்கள்.

எல்லாம் தனக்கே வேண்டும் என எண்ணுகிறார் அன்புமணி. நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று முடிவுக்கு வந்து செய்தியாளர்களை சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news