தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 02 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் வில்சன், சிவலிங்கம், கவிஞர் சர்மா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.