Sunday, January 25, 2026

ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்

ஜம்மு காஷ்மீரில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீரின் தோடாபகுதியில் 17 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், துயரமான சாலை விபத்தில் 10 இந்திய ராணுவ வீரர்களை இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும் காயமடைந்த வீரர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய, தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடினமான நேரத்தில் ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தேசம் துணை நிற்கிறது என தெரிவித்துள்ளார்.

Related News

Latest News