தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் செல்லமாக சூப்பர் ஸ்டார் என்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் செல்லமாக சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள், மேலும் இன்றளவும் இவருக்கு ரசிகர்கள் குறையாமல் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அதன் பின்னர் கார் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு சென்றார்.
விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்கிறேன்.
மேலும், இந்த திரைப்படம் ஜூன் மாதத்திற்கு பிறகு வெளியாகும் என்றார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்திடம் நடிகர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த் “நோ கமெண்ட்ஸ்” என பதில் அளித்து சென்றார்.
இதற்கு முன்னதாக பயணிகள் தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் கல்லூரி மாணவிகள் படுகர் இன நடனமாடி, பயணிகளை வரவேற்றனர். நடிகர் ரஜினிகாந்த்துக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், நடனமாடிய மாணவிகள், ரஜினியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
