முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்படவே, அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.